ADDED : நவ 04, 2026 05:57 AM
தர்மபுரி:தமிழ்நாடு
அரசு கிராம, பகுதி, சமுதாய, சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில்,
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம்
அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் காந்திமதி, மாவட்ட
துணைச்செயலாளர் கவுரி தலைமை வகித்தனர். பொருளாளர் ருக்மணி, மாவட்ட
செயலாளர் ரிபேக்கா முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், துணை
சுகாதார நிலையத்திலிருந்து இடைநிலை சுகாதார பணியாளரை
அப்புறப்படுத்த வேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள்
மேற்கொள்ளும், தாய்-சேய் நலப்பணியை இடைநிலை சுகாதார பணியாளர்
செய்வதாக, உண்மைக்கு புறம்பாக அறிக்கை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.
செய்யாத வேலைகளுக்காக, சமூக ஊடங்களில் பேட்டி கொடுக்கும் இடைநிலைப்
பணியாளரை நீக்கம் செய்ய வேண்டும். பாலின பாகுபாடற்ற பதவி உயர்வு வழங்க
வேண்டும். சமுதாய சுகாதார செவிலியருக்கு தாய்-சேய் நல அலுவலர் பதவி
உயர்வு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தினர்.
