/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் கேட்டு மறியலுக்கு முயற்சி பொதுமக்களை அதிகாரிகள் சமரசம்
/
குடிநீர் கேட்டு மறியலுக்கு முயற்சி பொதுமக்களை அதிகாரிகள் சமரசம்
குடிநீர் கேட்டு மறியலுக்கு முயற்சி பொதுமக்களை அதிகாரிகள் சமரசம்
குடிநீர் கேட்டு மறியலுக்கு முயற்சி பொதுமக்களை அதிகாரிகள் சமரசம்
ADDED : டிச 25, 2024 01:57 AM
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 25---
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொம்மிடி ஊராட்சியிலுள்ள, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், 10,000 பேர் வசிக்கின்றனர். இதில் பொ.நடூர் பகுதியில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த, 30ல் பெய்த மழையால், 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில், 900 மீ., அளவிற்கு மழைநீர் செல்ல கழிவுநீர் கால்வாய் அமைக்க குழி எடுக்கப்பட்டது. இப்பணியால் குடிநீர் குழாய்கள் சேதமாகி, அப்பகுதியிலுள்ள, 1,000 குடும்பத்தினருக்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த, 25 நாட்களாக குடிநீரின்றி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். பலமுறை அதிகாரிகளிடமும், ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று, அப்பகுதி மக்கள், பொம்மிடி போலீஸ் ஸ்டேஷன் முன், பாப்பிரெட்டிப்பட்டி - -தர்மபுரி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களிடம், பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., ஜோதிகணேஷ், ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகன், எஸ்.ஐ., மாரப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள் பி.டி.ஓ.,வை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், 2 நாட்களில் மழைநீர் செல்ல கழிவுநீர் கால்வாய் அமைக்கவும், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி கூறியதையடுத்து மறியல் செய்யாமல் கலைந்து சென்றனர்.

