sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அ.தி.மு.க.,வில் தொண்டர்கள்தான் தலைவர்களாக வருவர்: முனுசாமி

/

அ.தி.மு.க.,வில் தொண்டர்கள்தான் தலைவர்களாக வருவர்: முனுசாமி

அ.தி.மு.க.,வில் தொண்டர்கள்தான் தலைவர்களாக வருவர்: முனுசாமி

அ.தி.மு.க.,வில் தொண்டர்கள்தான் தலைவர்களாக வருவர்: முனுசாமி


ADDED : நவ 23, 2024 03:03 AM

Google News

ADDED : நவ 23, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: ''அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் என்பது இல்லை, அடுத்த தலைமுறை வரும்போது, தொண்டர்கள் தலைவர்களாக வருவர்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி பேசினார்.

தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டம் கட்சி அலுவ-லகத்தில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற துணை பொதுச்செ-யலர் முனுசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:- வரும், 2026 சட்ட-சபை தேர்தலில் வெற்றி பெற்று, பழனிசாமியை முதல்வர் ஆக்கு-வதற்காக, மாவட்டம் தோறும் கட்சி நிர்வாகிகள் களப்பணியாற்-றுகின்றனர்.

அண்ணாமலை என்பவர் ஒரு தேசிய கட்சியின் தலைவர். அவர் மூன்று ஆண்டுகள் இருப்பார். அதன் பிறகு போய்விடுவார். நடிகர் விஜய் இப்போது தான், கட்சியை தொடங்கி இருக்கிறார். தி.மு.க.,வில் உதயநிதி தனிப்பட்ட உழைப்பால், இந்த இடத்-திற்கு வரவில்லை. தாத்தா, தந்தை, அடுத்து மகன் என்ற நிலையில் தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இது வாரிசு அரசியல்.

ஆனால், அ.தி.மு.க., ஒரு ஜனநாயக கட்சி, இங்கு வாரிசு அர-சியல் இல்லை. முன்னாள் முதல்-வர், எம்.ஜி.ஆர்., கட்சியை தொடங்கி, மறைந்த போது அடுத்த தலைவரை அடையாளம் காட்டவில்லை. அதேபோல், முன்னாள் முதல்-வர் ஜெயலலிதா இறந்த பிறகு, அடுத்த தலைவரை அடையாளம் காட்டவில்லை. இந்த கட்சியில் உழைப்பவர்கள் தான் தலைவராக வந்திருக்கின்-றனர். அடுத்த தலைமுறை வரும்போது, தலைவர்கள் தானாக வருவர்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us