/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
/
ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
ADDED : செப் 19, 2025 01:27 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொ.மல்லாபுரம் பேரூராட்சி, வினோபாஜி தெரு பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி, பொதுமக்களுக்கு சுத்தமான நீர் கிடைக்க, சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தி தர வேண்டி, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அப்பகுதியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
இதை, பொ.மல்லாபுரம் தி.மு.க., நகர செயலாளர் கவுதமன், பேரூராட்சி தலைவர் சாந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலர்கள் புஷ்பராஜ், உதயகுமார், சேகர் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் சக்திவேல், அர்த்தநாரி, மாது, கோகுல், ரகுமான், மதன், பரமன் முரளி, யாரப், லட்சுமணன், ஒப்பந்ததாரர் சசிகுமார் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.