/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'கோவிந்தா' கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு
/
'கோவிந்தா' கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு
ADDED : டிச 31, 2025 06:34 AM

தர்மபுரி: வைகுண்ட ஏகாதசியையொட்டி, தர்மபுரியி-லுள்ள பரவாசுதேவ சுவாமி கோவிலில், அதி-காலை, 5:00 மணிக்கு 'பரமபத வாசல்' என்ற 'சொர்க்கவாசல்' திறப்பு நடந்தது. இதில், பரவாசு-தேவ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்-பட்டது.
இதேபோல், பாலக்கோடு அருகே, பிக்கனஹள்-ளியிலுள்ள சென்னகேசவ பெருமாள், தர்மபுரி டவுன் கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி, அதியமான்கோட்டை சென்றாய பெருமாள், லளிகம் சென்றாய பெருமாள், பழைய தர்மபுரி வரதகுப்பம் வெங்கட்ரமண சுவாமி உட்-பட மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்-களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. * அரூர் பரசுராமன் தெருவில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு 'சொர்க்கவாசல்' திறக்கப்பட்டது. பக்-தர்கள் காத்திருந்து பக்தி பரவசத்துடன் 'கோவிந்தா' என கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், அரூர் பழையபேட்டை கரியபெ-ருமாள் கோவில், மொரப்பூர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடந்த சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.
அரூர் கடைவீதியிலுள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில், சொர்க்கவாசல் திறக்-கப்பட்டது.

