/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க.,வில் ஐக்கியமான பா.ம.க., - த.வெ.க., நிர்வாகிகள்
/
தி.மு.க.,வில் ஐக்கியமான பா.ம.க., - த.வெ.க., நிர்வாகிகள்
தி.மு.க.,வில் ஐக்கியமான பா.ம.க., - த.வெ.க., நிர்வாகிகள்
தி.மு.க.,வில் ஐக்கியமான பா.ம.க., - த.வெ.க., நிர்வாகிகள்
ADDED : டிச 31, 2025 06:34 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்டம் பாப்பிரெட்-டிப்பட்டி மத்திய ஒன்றியத்தின் சார்பில் அதிகா-ரப்பட்டி ஊராட்சியில், 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற மக்கள் சந்திப்பு கூட்டம், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் நடந்தது.
தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், தி.மு.க., மாநில வர்த்தகர் அணி துணைச்செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் பேசினர். அப்போது, தி.மு.க., அரசின் சாத-னைகள், திட்டங்கள் உள்ளிட்டவைகளை பொது-மக்களிடையே எடுத்துக்கூறி தொடர்ந்து, தி.மு.க., ஆட்சி அமைக்க, அனைவரும் வாக்க-ளிக்க கேட்டுக்கொண்டனர்.கூட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி, பா.ம.க., கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடேஷ், த.வெ.க., கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி செய-லாளர் பவித்ரன் உள்ளிட்ட பலர், அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் பழனி-யப்பன், மாநில வர்த்தக அணி துணைச்செய-லாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முத்-துக்குமார் ஆகியோர் முன்னிலையில், தங்களை, தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டனர். அவர்க-ளுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலை-வர்கள் அழகிரி, ஜெயராமன், கிளை செயலா-ளர்கள் சுஜய், கோவிந்தசாமி, வாக்குச்சாவடி முகவர்கள் ஏங்கல்ஸ், சிலம்பரசன், குமார், ராம-மூர்த்தி உட்பட, தி.மு.க., - பா.ம.க., - த.வெ.க., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

