/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இயற்கை விவசாயிகள் சங்க வேளாண் கருத்தரங்கு
/
இயற்கை விவசாயிகள் சங்க வேளாண் கருத்தரங்கு
ADDED : செப் 23, 2025 01:51 AM
பாப்பாரப்பட்டி, பாப்பாரப்பட்டியில் இயற்கை விவசாயிகள் சங்க வேளாண் கருத்தரங்கு நேற்று நடந்தது. பென்னாகரம் வட்ட இலவச சட்ட ஆலோசகர் வக்கீல் தேவேந்திரன் தலைமை வகித்தார். மலையூர், பிக்கிலி, கொல்லப்பட்டி, மாமரத்துபள்ளம், நாகதாசம்பட்டி, தொட்டலாம்பட்டி போன்ற கிராமங்களில் இருந்து, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சிறு வியாபாரிகள் குழு செயலாளர் முனுசாமி உழவன் செயலி பயன்கள் குறித்தும், பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், மீன் அமிலம் ஆகியவை தயாரிக்கும் முறை மற்றும் அதை பயன்படுத்தும் விதம் பற்றி எடுத்துரைத்தார். விவசாயிகள் குழு செயலாளர் அருண்குமார் விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வத்தோடு கலந்து கொள்ள வேண்டும்.
விவசாயிகள் நமது கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்து செல்வதில் எந்த வித தயக்கமும் காட்டக்கூடாது. இயற்கை விவசாயம் குறித்து, அடிக்கடி மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என, கேட்டு கொண்டார். விவசாயிகள் குழு பொருளாளர் சஞ்சீவன், விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய இலவச கையேடு வழங்கினார்