UPDATED : அக் 20, 2026 04:38 AM
ADDED : அக் 20, 2026 02:37 AM

அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்றுவட்டாரத்தில், நெல் சாகுபடிக்காக விவசாயிகள் நாற்றங்காலில் நெல் விதைப்பு செய்தனர்.
தொடர்ந்து, நாற்று வளர்ந்து நடவுக்கு தயார் நிலையில் இருந்த நிலையில் மழையின்றி கடும் வெயில் அடித்ததால் நெல் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில் அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில், கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதையடுத்து, ஆழ்துளை மற்றும் கிணற்று பாசனம் மூலம், நிலத்தை டிராக்டரை கொண்டு உழுது பண்படுத்தி, நாற்று பறித்து, சம்பா நடவு பணியை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.
