ADDED : அக் 20, 2026 02:38 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டியை சேர்ந்தவர் புஷ்பராஜ், 60. கூலித்தொழிலாளி. இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், மகனும், மகளும் இருந்தனர். மனைவியும், மகனும் இறந்து விட்டனர்.
மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார். இந்த நிலையில், புஷ்பராஜ் கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். இதில் சில நாட்களாக விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்தார். நேற்று காலை மர்மமான முறையில் அப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்திலுள்ள புளியமரத்தில் கயிற்றால் துாக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். ஏ.பள்ளிப்பட்டி போலீசார் புஷ்பராஜ் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.
