sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் நிர்வாகிகள் தேர்தலை முறையாக நடத்த மக்கள் வாக்குவாதம்

/

பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் நிர்வாகிகள் தேர்தலை முறையாக நடத்த மக்கள் வாக்குவாதம்

பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் நிர்வாகிகள் தேர்தலை முறையாக நடத்த மக்கள் வாக்குவாதம்

பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் நிர்வாகிகள் தேர்தலை முறையாக நடத்த மக்கள் வாக்குவாதம்


ADDED : ஜன 26, 2025 04:34 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் நிர்-வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலை முறையாக நடத்தக்-கோரி, அப்பகுதி மக்கள், அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பி.அக்ரஹாரம் முனி-யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோ-விலின், 2025ம் ஆண்டிற்கான அறங்காவலர் குழு, அறங்காவலர் தலைவர், தர்மகர்த்தா பதவிகளுக்கான தேர்தல் நடப்பதாக ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தெரிவித்-துள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பக்-தர்கள், பொதுமக்களுக்கு எவ்வித தகவலும் தராமலும், தன்னிச்-சையாக செயல்படுவதாகவும், தி.மு.க.,வினர் கை காட்டிய நபரே, கோவில் தர்மகர்த்தாவாக முடியும் என, உதவி ஆணையர் தெரிவித்ததாக கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைய-டுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த பென்னாகரம் போலீசார், பொதுமக்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து, தேர்தலை பாதியிலேயே நிறுத்தி விட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர்.முறைப்படி தேர்தலை முன்கூட்-டியே அறிவித்து, தேர்தல் மூலமாகவே தர்மக்கர்த்தாவை தேர்வு செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்-திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us