ரேஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை
ரேஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை
ADDED : செப் 30, 2026 06:21 AM

நல்லம்பள்ளி; நல்லம்பள்ளி அருகே, நார்த்தம்பட்டியில் திறப்-புவிழா கண்ட, ரேஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர, கிராம மக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, நார்த்தம்பட்டி பஞ்.,ல் நார்த்தம்பட்டி, மேட்ச் பேக்-டரி, கொட்டம்பட்டி, சித்துார் உட்பட, 5க்கும் மேற்-பட்ட கிராமங்களை சேர்ந்த, 1,300 ரேஷன் கார்டு-தாரர்கள் அனைவருக்கும், நார்த்தம்பட்டியிலுள்ள ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை, பருப்பு உட்பட பொது வினியோக திட்ட பொருட்கள் வழங்கப்-பட்டு வருகிறது. 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒரே இடத்திற்கு வருவதால், பொருட்கள் வாங்-குவதில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும், மற்ற கிராம மக்கள், 2 கி.மீ., துாரம் வரை கடந்து வந்து, பொருட்களை வாங்கி செல்லும் நிலை உள்ளது.பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, மேட்ச் பேக்டரி, கொட்டம்பட்டி, சித்துார் பகுதி மக்களுக்கு கடந்தாண்டு, 700 ரேஷன் கார்டுகளை தனியாக பிரித்து, மேட்ச் பேக்டரி பகுதியில், 12.70 லட்சம் மதிப்பில், புதிதாக ரேஷன்கடை கட்டப்-பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது. ஆனால், இது-வரை ரேஷன்கடை பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே, இனிமேலாவது, ரேஷன்கடையை பயன்-பாட்டிற்கு கொண்டு வர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
