/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பஸ்சை சிறைபிடித்து குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
/
அரசு பஸ்சை சிறைபிடித்து குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
அரசு பஸ்சை சிறைபிடித்து குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
அரசு பஸ்சை சிறைபிடித்து குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
ADDED : ஏப் 23, 2025 01:23 AM
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே, 2 மாதமாக ஒகேனக்கல் குடிநீர் சீராக வழங்காததை கண்டித்து, அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாலஜங்கமனஹள்ளி பஞ்., உட்பட்ட முத்துகவுண்டன் கொட்டாயில், 60 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்கு, உள்ளுர் நீராதாரமான ஆழ்துளை கிணறு மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதில் கடந்த, 5 ஆண்டுக்கு முன், ஆழ்துளை குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், ஒகேனக்கல் குடிநீரை மட்டும் நம்பியிருந்தனர்.
கடந்த, 2 மாதமாக ஒகேனக்கல் குடிநீரும் சீராக வழங்கவில்லை. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த மக்கள், காலி குடங்களுடன் நேற்று காலை, 8:00 மணிக்கு ஈச்சம்பட்டி - நல்லம்பள்ளி சாலையில், அவ்வழியாக வந்த வழிதடம் எண், 5ஏ அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து, மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த பாலஜங்கமனஹள்ளி பஞ்., செயலர் ருக்குமணி, குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், பொதுமக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.