/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரயில்வே தண்டவாளத்தில் மக்கள் தர்ணா போராட்டம்
/
ரயில்வே தண்டவாளத்தில் மக்கள் தர்ணா போராட்டம்
ADDED : டிச 03, 2024 07:15 AM
தர்மபுரி: பாலக்கோடு அடுத்த, மோதுகுலஹள்ளி ரயில்வே கேட் வழியாக கரகதஹள்ளி,
மோதுகுலஹள்ளி, காட்டம்பட்டி, சோமனஹள்ளி, உள்ளிட்ட பகுதிகைளை சேர்ந்த
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் விவசாய பொருட்களை
கொண்டு செல்-கின்றனர். கடந்த, 4 மாதங்களுக்கு முன், கேட்டை மூடிவிட்டு, சுரங்க பாலம் அமைத்தனர். அவசர
கதியில் அமைக்கப்பட்ட பாலத்-திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால்,
அதை கண்-டுகொள்ளாமல் ரயில்வே நிர்வாகம் சுரங்க பாலத்தை கட்டி முடித்-தது. கடந்த,
2 நாட்களாக பெய்த கனமழையால் பாலத்தில், 10 அடிக்கு மேல் தேங்கிய தண்ணீர்
வெளியேற வழியில்லாததால், பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இது குறித்து, தகவல் அளித்தும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்-ளாததால்,
ஆத்திரமடைந்த பொதுமக்கள், மோதுகுலஹள்ளி ரயில்வே தண்டவாளத்தில்
அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு-பட்டனர். பாலக்கோடு டி.எஸ்பி., மனோகரன்,
தாசில்தார் ரஜினி, பி.டி.ஓ.,க்கள் மீனா, ரேணுகா ஆகியோர் பொதுமக்களை சமரசம் செய்து,
மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்ததையடுத்து
பொதுமக்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.