/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓட்டளிக்க சொந்த ஊர் திரும்பிய மக்கள்
/
ஓட்டளிக்க சொந்த ஊர் திரும்பிய மக்கள்
ADDED : ஏப் 19, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திருப்பூர், கோவை மற்றும் ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று, (ஏப்.19) லோக்சபா தேர்தல் நடப்பதை முன்னிட்டு, வெளியூரில் தங்கியிருந்தவர்கள் ஓட்டு போடுவதற்காக நேற்று தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால், அரூர் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

