ADDED : அக் 08, 2024 05:00 AM
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலக்தில், நேற்று நடந்த குறைநீர் முகாமில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம், 434 மனுக்களை பொதுமக்கள், கலெக்டர் சாந்தியிடம் வழங்கினர். அவற்றை உரிய அதிகாரிகளிடம் வழங்கிய கலெக்டர் தீர்வு காண உத்தரவிட்டார்.
ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்து பிரப்பு பிரசாரம் மேற்கொண்ட பென்னாகரம் வட்டார அளவிலா மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புக்கு முதல் பரிசாக, 5,000 ரூபாய் வழங்கினார். தொடர்ந்து, கடத்துார் வட்டார அளவிலான கூட்-டமைப்புக்கு, 2ம் பரிசாக, 4,000 ரூபாய், ஏரியூர் வட்டார கூட்ட-மைப்புக்கு, 2ம் பரிசாக, 3,000 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட அளவில் சிறந்த வங்கியாக செயல்பட்ட இந்தியன் வங்-கிக்கு, முதல் பரிசாக, 15,000, 2ம் இடம் பெற்ற தமிழ்நாடு கிராம வங்கி தர்மபுரி கிளைக்கு, 10,000 மற்றும் 3ம் இடம் பெற்ற மத்திய கூட்டுறவு வங்கி காரிமங்கலம் கிளைக்கு, 5,000 ரூபாய் பரிசு தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்சியில், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸி ராஜ்குமார், மகிளிர் திட்ட இயக்குனர் லலிதா உட்பட பலர் பங்கேற்றனர்.