/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சேறும், சகதியுமான பாதையை தார்ச்சாலையாக்க கோரி மனு
/
சேறும், சகதியுமான பாதையை தார்ச்சாலையாக்க கோரி மனு
ADDED : அக் 28, 2025 01:39 AM
தர்மபுரி, செட்டிக்கரை பஞ்.,ல் கால்நடை மருத்துவமனை முதல், சாக்கன் கொட்டாய் வரை சேறும் சகதியுமான, மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றக்கோரி, அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி அடுத்துள்ள செடிக்கரை பஞ்.,க்கு உட்பட்ட சாக்கன்கொட்டாய் கிராமத்தில் இருந்து அரசு பொறியில் கல்லுாரி வழியாக, கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் மண் சாலை உள்ளது. இதை அக்கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையை சீரமைக்க கடந்த சில ஆண்டுக்கு முன், கொண்டுவரப்பட்ட ஜல்லி, மண் சாலை ஓரமாக கொட்டப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை சாலை சீரமைப்பு பணிகள் செய்யாமல் கிடப்பில் உள்ளது. இதனால், சமீபத்தில் பெய்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கி, சேரும், சகதியுமாக மாறியுள்ளது. எனவே, சாக்கன்கொட்டாய் கிராமத்திற்கு செல்லும் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தார்.

