/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு மையத்தில் வேலை வாய்ப்பு முகாம்
/
பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு மையத்தில் வேலை வாய்ப்பு முகாம்
பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு மையத்தில் வேலை வாய்ப்பு முகாம்
பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு மையத்தில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : மே 08, 2024 05:03 AM
தர்மபுரி : பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மேலாண்மை துறை சார்பாக, நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில், பணி ஆணையை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வழங்கினார்.
தர்மபுரி அடுத்த, பைசுஹள்யில் செயல்பட்டு வரும், பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மேலாண்மை துறை சார்பாக, தனியார் நிறுவனங்கள் மூலம், வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், மேலாண்மை துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்பு உரை மற்றும் ஆண்டறிக்கை வாசித்தார். இயக்குனர் (பொ) மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். பெரியார் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் மற்றும் வேலை வாய்ப்பு துறை திருமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில், தனியார் நிறுவனங்கள் மூலம், இயற்பியல், கணிதம், மேலாண்மை துறையில் வேலைவாய்ப்பு பெற்ற, 35 மாணவர்களுக்கு, பணி ஆணையை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில், மேலாண்மை துறை உதவி பேராசிரியர் சுரேஷ் நன்றி தெரிவித்தார்.