/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடத்துார் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பறிமுதல்
/
கடத்துார் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பறிமுதல்
ADDED : ஜூன் 17, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் பேரூராட்சியிலுள்ள கடைகளில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஹெப்ரோன், அலுவலர் தங்கதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் விஜயசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சோதனை செய்தனர்.
இதில், 19 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பயன் படுத்திய, 4 கடைகளுக்கு தலா, 500 ரூபாய் வீதம், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.