ADDED : செப் 07, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு :தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு காவலர் தின விழா கொண்டாடப்பட்டது.
பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன், பயிற்சி டி.எஸ்.பி., பானு, இன்ஸ்பெக்டர்கள் பாலசுந்தரம், பார்த்தீபன், ரவுத்திரி வெங்கடேஷ், வீரம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவலர்களுக்கான கயிறு ஏறுதல், மியூசிக்கல் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், சான்றிதழ்களை ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி குழும தலைவர் கோவிந்தராஜ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பாலக்கோடு, காரிமங்கலம், பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், மாரண்டஹள்ளி ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.