ADDED : ஆக 15, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தின விழா, இன்று கொண்டாடப்பட உள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் சதீஷ் தேசியக்கொடியை ஏற்றி வைக்க உள்ளார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், தியாகிகள் கவுர விப்பு, சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு கேடயம், பதக்கம், நற்சான்றிதழ் உள்ளிட்டவை வழங்க உள்ளார்.
இதில், போலீசார் மற்றும் பள்ளி கல்லுாரிகளை சேர்ந்த சாரண, சாரணியர், தேசிய மாணவர் படை, ஜே.ஆர்.சி., மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
இதையொட்டி நேற்று, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதை, மாவட்ட கலெக்டர் சதீஸ், எஸ்.பி., மகேஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டனர்.