ADDED : நவ 01, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துாரில், 12 லட்சம் ரூபாயில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.
ஆத்துார் நகராட்சி, அம்பேத்கர் நகரில் உள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில், கான்கிரீட் சாலை அமைக்க, ஆத்துார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.
நேற்று, இதற்கான பூமி பூஜை, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமையில் நடந்தது. இதில், நகர செயலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2 கோவில்களில் பணம்

