ADDED : ஆக 10, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்களின் நலன் கருதி நிலுவையிலுள்ள வழக்குகளை ஆராய்ந்து தீர்வு காண சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் உத்தரவின் படி நேற்று, இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் நடந்தது.
முகாமில் பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டார். எஸ்.ஐ.,க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் மனுவை பெற்று விசாரணை மேற்கொண்டு தீர்வு வழங்கினர். முகாமில், 75 மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.