/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
/
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
ADDED : நவ 23, 2024 03:05 AM
தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே, பழைய ஏலகிரியில் குடிநீர் கேட்டு, பொது-மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி அடுத்த, ஏலகிரி பஞ்.,க்கு உட்பட்ட பழைய ஏலகி-ரியில், 300 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்-குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம், குடிநீர் வினி-யோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக, குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, அப்பகுதி மக்கள் தவித்து வந்-தனர். இது குறித்து, அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாததால், மக்கள் நேற்று, ஏலகிரி-நாகா-வதி அணை சாலையில், காலி குடங்களுடன் மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
ஏலகிரி வி.ஏ.ஓ., சிவசுப்பிர
மணியம், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு இது கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்தார். இதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்-றனர்.