sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி, சேலை வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தி

/

பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி, சேலை வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தி

பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி, சேலை வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தி

பொங்கல் பரிசு தொகுப்பில் வேட்டி, சேலை வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தி


ADDED : ஜன 13, 2025 02:30 AM

Google News

ADDED : ஜன 13, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த, 9ல் குடும்ப அட்டைதாரர்-களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்-றுவட்டாரத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கச்சென்ற பொது-மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: பொங்கல் பரிசு தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன், வேட்டி, சேலை வழங்கப்படும் என அறிவிக்-கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவங்கிய கடந்த, 9 மற்றும், 10 ஆகிய, 2 நாட்கள் மட்டும், அரூர் தாலு-காவில் பொங்கல் பரிசு தொகுப்புடன், வேட்டி, சேலை வழங்கப்-பட்டது. அதுவும், ஆண் சென்றால் வேட்டி மட்டும், பெண் சென்றால் சேலை மட்டும் வழங்கப்பட்டது. கடந்த, 2 நாட்களாக வேட்டி, சேலை வழங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஏன் வேட்டி, சேலை வழங்கவில்லை என ரேஷன் கடை விற்பனையாளரிடம் கேட்டால், தீர்ந்து விட்டது எனக் கூறுகின்றனர்.

ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பில், பணம் வழங்கப்படா-ததால், மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கும் நிலையில், தற்-போது வேட்டி, சேலையும் வழங்காததால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us