ADDED : மார் 05, 2025 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பலர், முள்ளங்கி சாகுபடி செய்கின்றனர். விதை நடவு செய்து, ஒன்றரை மாதத்தில் முள்ளங்கியை அறுவடை செய்ய முடியும். எனவே, குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர் என்பதால், முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக, தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ஒரு கிலோ முள்ளங்கி, 4 முதல், 5 ரூபாய் வரை விற்றது. இதனால், முள்ளங்கி விவசாயிகள் வேதனையடைந்தனர். ஒரே சமயத்தில், அதிக பரப்பில் முள்ளங்கி சாகுபடி நடந்ததாலும், சந்தைக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்தது, விலை சரிவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.