UPDATED : அக் 27, 2026 07:34 AM
ADDED : அக் 27, 2026 06:29 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், நேற்று காலை வரை தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது.
இதில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில், அதிகபட்சமாக அரூர், 32 மி.மீ., மழை பதிவானது. அதை தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி, 21, பாலக்கோடு, 19, ஒகேனக்கல், 15, பென்னாகரம், 13, நல்லம்பள்ளி, 12, தர்மபுரி, 10, மாரண்டஹள்ளி, 9, மொரப்பூர், 3 என மாவட்டத்தில் மொத்தம், 134 மி.மீ., சராசரியாக, 14.89 மி.மீ., மழை பதிவானது.
