UPDATED : அக் 17, 2026 05:15 AM
ADDED : அக் 17, 2026 04:33 AM

தர்மபுரி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், தர்மபுரி உட்பட, 33 மாவட்டங்களில் கன பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாட்டத்தில் பாலக்கோடு பகுதியில், 23 மி.மீ., பென்னாகரம், 9, ஒகேனக்கல், 4.6 மி.மீ., மழையளவு பதிவானது. நேற்று மதியம், 2:30 மணி முதல் மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், இண்டூர், பாலக்கோடு, அரூர், பொம்மிடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஒரு மணி நேரம் மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.* அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தது. நேற்று மதியம், 12:00 மணி முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின், 1:30 மணி முதல் அரூர், மோப்பிரிப்பட்டி, தொட்டம்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. கம்பைநல்லுார் அடுத்த சொர்ணம்பட்டி, கெலவள்ளி, பெரமாண்டப்பட்டி, கூடுதுறைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதியில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியது. நேற்று பெய்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
