/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல் குடிநீர் கேட்டு கோரிக்கை
/
ஒகேனக்கல் குடிநீர் கேட்டு கோரிக்கை
ADDED : செப் 30, 2025 02:15 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டியில், அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு ஒகேனக்கல் குடிநீர் வசதி செய்து தரக்கோரி, பள்ளி மேலாண்மை குழுவினர், அரூர் பி.டி.ஓ., செல்வனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அதில் அவர்கள், கூறியுள்ளதாவது: எல்லப்புடையாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இதுவரை பள்ளிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், இப் பள்ளி மாணவர்கள் ஆழ்துளை கிணறுகளில் இருந்து கிடைக்கும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி வளாகம் அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் இணைப்புகள் இருந்தபோதிலும், இது வரை, பஞ்., நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எல்லப்புடையாம்பட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு ஒகேனக்கல் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.