/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
/
கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
ADDED : செப் 01, 2025 02:24 AM
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்துள்ளது லிங்காபுரம் ஏரி. மழைக்காலங்களில் வாணியாற்றில் வரும் வெள்ள நீர் மற்றும் வாணியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம், ஏரி நிரம்பும். இந்த ஏரி நிரம்பியவுடன் அதிலிருந்து, வெளியேறும் உபரிநீர், ஒரு கி.மீ., துாரத்திலுள்ள நர்சனேரிக்கு செல்லும்.
இந்நிலையில், ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய் சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், லிங்காபுரம் ஏரி நிரம்பிய போதிலும், கடந்த, 3 ஆண்டுகளாக நர்சனேரிக்கு உபரி நீர் செல்லவில்லை. எனவே, நர்சனேரிக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.