ADDED : நவ 26, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த கோபாலப்பட்டியில், கோவில் நிலம் ஆக்கிர-மிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, கலெக்டர் சாந்திக்கு அனுப்பியுள்ள மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது: கோபாலப்பட்டியில் ராஜவீதி வழி நடைபாதை மற்றும் முருகர் கோவில் நிலம் ஆகியவற்றை சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், அவ்வழி-யாக செல்பவர்களை தகாத வார்த்தையால் திட்டுகின்றனர். எனவே, நடைபாதை மற்றும் முருகர் கோவில் நிலம் ஆக்கிர-மிப்பை அகற்றி, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்-டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.

