/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க ஓய்வு பெற்றோர் அமைப்பு வலியுறுத்தல்

ADDED : ஜூலை 23, 2025 01:53 AM
தர்மபுரி, 70 வயது கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு, 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு பேரவை கூட்டம், தர்மபுரி, மருந்து வணிகர் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.
துணைத்தலைவர்கள் துரைசாமி, சுப்பிரமணி வரவேற்றனர். பொருளாளர் சின்னசாமி வரவு செலவு அறிக்கை சமர்பித்தார். கூட்டத்தில், 75 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.
மாநில துணை பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணி பேசுகையில், “புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம், மருத்துவ காப்பீட்டை மின்வாரியமே ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார்.
தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், அரசு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில இணை செயலாளர் குப்புசாமி மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.