/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
ADDED : மார் 18, 2024 03:14 AM
தர்மபுரி: தர்மபுரி லோக்சபா தொகுதி பொதுதேர்தலுக்காக, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்படும் இடத்தை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.
தமிழகத்தில் முதல் கட்டமாக, லோக்சபா தேர்தல் ஏப்., 19 ல் நடக்கவுள்ளது. இந்நிலையில், தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளில் பதிவாகும் ஓட்டுகள் தேர்தல் முடிந்தவுடன், செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டு, ஜூன், 4 ல் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். அந்த மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று ஆய்வு செய்தார். இதில், ஓட்டு எண்ணிக்கை மையத்தில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துதல், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இதில், எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், ஆர்.டி.ஓ., காயத்ரி, வில்சன்ராஜசேகர், மேட்டூர் சப் கலெக்டர் பொன்மணி, டி.எஸ்.பி., சிவராமன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

