தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 21, 2026 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில், 21 அம்ச கோரிக்கை-களை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் திருவேரங்கன் தலைமை வகித்தார். நிர்வாகி இளங்குமரன், மாவட்ட தலைவர் முகமது இலியாஸ், இணை செயலாளர்கள் சுரேஷ், சிபி சக்கரவர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறையிலுள்ள, 1,500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பஞ்., செயலாளர்களை உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்-டத்தில் இணைக்க வேண்டும். 7 ஆண்டுகள் பணி முடித்துள்ள பணி மேற்பார்வையாளர்கள் அனைவரையும் இளநிலை பொறி-யாளர் நிலைக்கு தரம் உயர்த்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர்கள் அனைவரையும் உதவி செயற்பொறியாளராக தரம் உயர்த்த வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த தொழில்நுட்ப உதவியா-ளர்கள், பதிவரை எழுத்தர்கள், சில்லறை செலவின பணியா-ளர்கள் அனைவரையும் பணி வரன்முறை செய்ய வேண்டும். 20க்கும் மேற்பட்ட பஞ்.,களை கொண்ட ஊராட்சி ஒன்றியங்-களை இரண்டாக பிரித்து புதிய யூனியன்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை வலியு-றுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us