ADDED : ஆக 21, 2026 01:26 AM
மொரப்பூர்: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நட-வடிக்கை குழு, 'டிட்டோ ஜாக்' சார்பில், மொரப்பூர் வட்டார கல்வி அலுவலகம் முன், நேற்று மாலை, 5:00 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார செயலாளர் ஆதிமூலம் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதிய திட்-டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்-களுக்கு கடந்த இரண்டு ஊதியக்குழுக்கள் ஏற்படுத்தியுள்ள கடு-மையான பாதிப்பினை கருத்தில் கொண்டு அவர்களுடைய ஊதிய முரண்பாடுகளை களைந்து, 2006 ஜன.,1 முதல், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண், 40 சதவீதம் என நிர்ணயம் செய்ய வேண்டும்.
இதில், பிற மாநிலங்களை கருத்தில் கொள்ளாமல், தமிழ்நாடு அரசு முன்னுதாரணமாக அரசாணை வெளியிட வேண்டும் என்-பன உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதேபோல், தர்மபுரி, அரூர், ஏரியூர் உள்ளிட்ட இடங்களிலுள்ள, வட்டார கல்வி அலுவலகம் முன் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
* 'டிட்டோஜாக்' சார்பில், கிருஷ்ணகிரி வட்டார கல்வி அலுவ-லகம் முன்பு நேற்று மாலை கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹென்றி பவுல் தலைமை வகித்தார். டிட்-டோஜாக் மாவட்ட பொருளாளர் சேகர் கோரிக்கை குறித்து பேசினார். ஆசிரியர்கள் ராவணன், நாராயணசாமி, தமிழ் செல்வன், அறிவரசி உள்பட பலர் பங்கேற்றனர்.
