/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெயில் அதிகரிப்பால் நுங்கு விற்பனை ஜோர்
/
வெயில் அதிகரிப்பால் நுங்கு விற்பனை ஜோர்
ADDED : ஏப் 13, 2025 05:03 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த பிப்., மாதம் முதலே கோடையின் தாக்கம் அதிகரித்ததால், மக்கள் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
உடல் சூட்டை தணிக்கும் பழங்கள், பழச்சாறு குடித்து வருகின்றனர். இதில் பனை நுங்கும் முக்கியமானது. தர்மபுரி மாவட்டத்தில் தற்போது தினமும், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உடல் குளிர்ச்சியை பராமரிக்க, பனை நுங்குக்கு அதிக பங்குள்ளது. இதனால் பனை நுங்கு சாப்பிட விற்கும் இடங்களை தேடி மக்கள் செல்கின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெனசி, பூதநத்தம், சேலம் மாவட்டம் ஓமலுார், மோரூர், மேச்சேரி, மேட்டூர், நல்லம்-பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்-படும் பனை நுங்கு, பொம்மிடி, துரிஞ்சிப்பட்டி, கடத்துார் பகுதியிலும் பாப்பிரெட்டிப்பட்டி மின் மின்வாரிய பஸ் நிறுத்தம் அருகில், பொம்மிடி ரோடு, பகுதிகளில் விற்பனை செய்யப்படு-கிறது. மூன்று நுங்கு, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.