/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாரண, சாரணியர் இயக்கமாவட்ட செயற்குழு கூட்டம்
/
சாரண, சாரணியர் இயக்கமாவட்ட செயற்குழு கூட்டம்
ADDED : டிச 21, 2024 01:29 AM
தர்மபுரி, டிச. 21-
பாலக்கோடு சாரண, சாரணியர் இயக்க, மாவட்ட செயற்குழு கூட்டம், தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். சாரண, சாரணியர் இயக்க மாவட்ட முதன்மை ஆணையர் மகாத்மா காந்தி தலைமை தாங்கினார். பாலக்கோடு சாரண, சாரணியர் இயக்கத்திற்கு புதிய அலுவலகம் அமைக்க வேண்டும். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடக்கவுள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய வைரவிழாவில் சாரணர் பெருந்திரள் அணி விழாவை சிறப்பாக நடத்த, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் வரும், 2025 ஜன., ல் நடத்தி புதிய பொறுப்பாளர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ஜெயபூர்ணிமா, மாவட்ட பயிற்சி ஆணையர்கள் அருள் பிரகாஷ், மஞ்சுளாதேவி, மாவட்ட அமைப்பு ஆணையர்கள் மணிவேல், பிரபாவதி, மாவட்ட துணை செயலாளர் கரிகாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

