/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.95 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
/
ரூ.95 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
ADDED : பிப் 21, 2024 01:11 AM
நல்லம்பள்ளி,:நல்லம்பள்ளி வாரச்சந்தையில், 95 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில், வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், ஆடுகளை விற்கவும், வாங்கவும் வந்தனர். தற்போது, பண்டிகை காலங்கள் இல்லாததால், இறைச்சிக்கான தேவை குறைந்து விட்டது. அதனால், ஆடுகள் வரத்து சந்தையில் குறைவாக இருந்தது. இதில், 8 கிலோ எடை கொண்ட சிறிய ஆடுகள், 2,500 ரூபாய்-க்கும், 30 கிலோ வரை எடை கொண்ட பெரிய ஆடுகள், 19,000 ரூபாய் வரையும் விற்பனையானது. ஆடுகள் வரத்து குறைவால், நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில், 95 லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

