ADDED : ஜூலை 02, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம், பென்னாகரம் சுண்ணாம்புகார தெருவில் பழமையான திரியம்பகேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலுக்கு பிரதோஷம், அமாவாசை
உள்ளிட்ட நாட்களில் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு இக்கோவிலின் கோபுர கலசத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். பென்னாகரம் போலீசார் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே, அக்கோவில் வளாகத்தில் இருந்த பெருமாள் சன்னதி கோபுர கலசம் திருடு போனது குறிப்பிடத்தக்கது.