/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடையடைப்பு: ஆதரவு திரட்டிய பா.ம.க.,
/
கடையடைப்பு: ஆதரவு திரட்டிய பா.ம.க.,
ADDED : அக் 03, 2024 01:33 AM
கடையடைப்பு: ஆதரவு திரட்டிய பா.ம.க.,
தர்மபுரி, அக். 3-
தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர, காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, பா.ம.க., சார்பில், நாளை காலை, 6:00 முதல், 12:00 மணி வரை, அரை நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.
பா.ம.க., கவுரவ தலைவர் மணி, தர்மபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் ஆகியோர் ஆலோசனைப்படி, அக்கட்சி நிர்வாகிகள், வணிகர்கள், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளான பாளையம்புதுார், சாமிசெட்டிப்பட்டி, ஏலகிரி, கொட்டாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிகர்களிடம், கடையடைப்பு போராட்டத்திற்கு கட்சி பாகுபாடின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, பா.ம.க., மாவட்ட துணைத்தலைவர் முத்து வேல் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினர். பா.ம.க., ஒன்றிய செயலாளர் அறிவு, மற்றும் கந்தசாமி, சக்திவேல், மெக்கானிக் குமார், மாங்கனி பிரபாகரன், முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

