/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு
/
கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு
ADDED : ஜூன் 08, 2025 01:14 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில், தர்மபுரியிலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவ, மாணவியருக்கு, 21 நாள் இலவச கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நடந்தது. இதில் ஏராளமான மாணவ-, மாணவியர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பயிற்சியாளர்களை கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோடைகால பயிற்சி முகாம் நிறைவிழா, தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட
கைப்பந்து கழக தலைவர், பூக்கடை ரவி தலைமை வகித்தார். செயலாளர் தங்கராஜ் வரவேற்றார். நிர்வாகி குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாவட்ட
உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினர்.
முகாமில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர் இனிவரும் காலங்களில் நடக்கும் போட்டிகளில் தர்மபுரி மாவட்ட அணி சார்பில் பங்கேற்று விளையாடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம் இணை செயலாளர் நிர்மல் குமார், மாநில இணை செயலாளர்
ஜெகநாதன், துணைத்தலைவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.