ADDED : செப் 27, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
அரூர், செப். 27-
அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், 2023ம் ஆண்டிற்கான தணிக்கையை கலெக்டர் சாந்தி நேற்று மேற்கொண்டார். அப்போது, அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டதுடன், பொதுமக்கள் அளிக்கும் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது, உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் பணியாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அரூர் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியை ஆய்வு மேற்கொண்டதுடன், அதை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அவருடன் அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், தாசில்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

