ADDED : அக் 22, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி, அக். 22----
கடத்துார் ஒன்றியம், தென்கரை கோட்டை --- வடகரை செல்லும் சாலையில் கல்லாற்றின் குறுக்கே, 2.37 கோடி ரூபாய் மதிப்பில், கட்டப்பட்ட மேம்பாலபணி, வடகரை -சிங்காரதோப்பு செல்லும் சாலையில், 2.04 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பால பணி, 5.07 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்கரை கோட்டையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும், இரு வீட்டு கட்டுமான பணிகளை, மாவட்ட கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான கவுரவ்குமார் ஆய்வு செய்தார். பி.டி.ஓ.,க்கள் கலைச்செல்வி, ஜெகதீசன், உதவி பொறியாளர்கள் பழனியம்மாள், சுகுணா, சவுதீபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.