/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மோசமான நிலையில் காணப்படும் போதக்காடு - பையர்நத்தம் சாலை
/
மோசமான நிலையில் காணப்படும் போதக்காடு - பையர்நத்தம் சாலை
மோசமான நிலையில் காணப்படும் போதக்காடு - பையர்நத்தம் சாலை
மோசமான நிலையில் காணப்படும் போதக்காடு - பையர்நத்தம் சாலை
ADDED : செப் 06, 2025 01:09 AM
பாப்பிரெட்டிப்பட்டி :தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், போதக்காடு ஊராட்சியில் கரியதாதனுார், மாரியம்மன் கோவிலுார், போதக்காடு முல்லை நகர் உள்ளிட்ட, 4 கிராமங்கள் உள்ளன. இவையனைத்தும் ஏற்காடு மலையின் பின்புறத்தில் அமைந்துள்ளது. 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக பாப்பிரெட்டிப்பட்டி, பையர்நத்தம், பொம்மிடி பகுதிகளுக்கு வந்து செல்ல வேண்டும். இதேபோன்று சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள ஆனாக்காடு, பெரியேரிக்காடு, தாளூர், மேலுார், நல்லுார், மோட்டுர், வெள்ளக்கடை, புலியூர், மஞ்சகுட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மக்களும் அத்தியாவசிய தேவைக்காக பையர்நத்தம், பொம்மிடி பகுதிக்கு தான் வருவர்.
இவ்வாறு வந்து செல்லும் மக்களுக்கு போதுமான சாலை வசதி இல்லை. போதக்காடு முதல் பையர்நத்தம் வரை, 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து மேடு பள்ளங்களாக காட்சியளிக்கிறது. பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ மாணவியர், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் பல்லாங்குழிகளாக காட்சியளிக்கும் இந்த சாலையை செப்பனிட்டு, புதிய தார்ச்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மலைவாழ் பழங்குடியின மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.