/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலை பணி பூஜைக்கு எதிர்ப்பு திரண்ட தி.மு.க.,வினரால் பரபரப்பு
/
சாலை பணி பூஜைக்கு எதிர்ப்பு திரண்ட தி.மு.க.,வினரால் பரபரப்பு
சாலை பணி பூஜைக்கு எதிர்ப்பு திரண்ட தி.மு.க.,வினரால் பரபரப்பு
சாலை பணி பூஜைக்கு எதிர்ப்பு திரண்ட தி.மு.க.,வினரால் பரபரப்பு
ADDED : செப் 24, 2024 01:59 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்மம்பட்டி பஞ்.,ல் சோழியானுார் முதல், மழையூர் காடு வரை, பிரதம மந்-திரி கிராம சாலைகள் திட்டத்தில், 6.6 கி.மீ., சாலை அமைக்க, 4.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதில், தார்ச்சாலை பணிக்கு, தர்மபுரி, பா.ம.க., - எல்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் பூமி பூஜை செய்ய கம்மம்பட்டிக்கு நேற்று காலை சென்றார். அப்-போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, தி.மு.க.,வினர் திரண்டனர். அதே சமயத்தில்,
பா.ம.க., தொண்டர்களும் அங்கு திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக, தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன், தொப்பூர் இன்ஸ்-பெக்டர் (பொ) லதா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு-பட்டனர். இதையடுத்து, சாலைப்பணிக்கு, பா.ம.க., - எல்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் பூமி பூஜை செய்து
தொடங்கி வைத்தார். அதேபோல், கடந்த, 20 அன்று அதே சாலைக்கு, தி.மு.க., - எம்.பி., மணி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்-பிரமணி ஆகியோர் பூமிபூஜை செய்தது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம்
பென்னாகரத்தில், தி.மு.க., - பா.ம.க.,வினரிடையே பூமி பூஜை விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதால், நேற்று கம்மம்-பட்டியில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்-டனர்.

