ADDED : நவ 12, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கால்வாயில் விழுந்த
தொழிலாளி பலி
தேன்கனிக்கோட்டை, நவ. 12-
தேன்கனிக்கோட்டை அருகே கண்டகானப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசராஜூ, 47. கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் பகுதியில் தங்கி, விவசாய கூலி வேலை செய்து வந்தார். அடிக்கடி மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க ஊருக்கு வந்து செல்வார்.
நேற்று முன்தினம் ஊருக்கு வந்த சீனிவாசராஜூ, இரவில் அப்பகுதியில் உள்ள கால்வாய் திண்டில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக கால்வாயில் தவறி விழுந்து தலையில் படுகாயமடைந்தார்.
அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.