/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்; ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை
/
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்; ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்; ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்; ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை
ADDED : மார் 11, 2025 06:32 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலின் மாசிமக தேரோட்ட விழா, வரும், 18ல் நடக்கிறது. இதையொட்டி, அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், தேரோட்டத்தின் போது துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர், ஹிந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறை, போலீஸ், பொதுப்பணி, தீயணைப்பு, ஊரக வளர்ச்சி, மின்சாரம், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.