ADDED : ஜூன் 30, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொண்டையாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்
விவசாயி ஐயப்பன், 43. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டை முன்பக்கமாக பூட்டி கொண்டு, காற்றோட்டமாக வீட்டின் வெளியே துாங்கி கொண்டிருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் புகுந்த மர்மநபர்கள், அலமாரியில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து, பீரோவை திறந்து உள்ளே இருந்த, 22 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப்பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. தெள்ளார் போலீசார் விசாரிக்கின்றனர்.