/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இரும்பு கடையில் திருடியவர்கள் கைது
/
இரும்பு கடையில் திருடியவர்கள் கைது
ADDED : டிச 11, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரும்பு கடையில்
திருடியவர்கள் கைது
கிருஷ்ணகிரி, டிச. 11-
மகராஜகடையை சேர்ந்தவர் முத்துகுமார், 26. இவர் காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் அருகில் பழைய இரும்பு குடோன் வைத்துள்ளார். கடந்த, 8 இரவு அங்கிருந்த, 80 கிலோ இரும்பு கம்பிகளை சிலர் திருடினர். அப்பகுதியினர் அவர்களை பிடித்து, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில அவர்கள், கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த கார்த்திக், 21, திலீப்குமார், 24, பூபதி, 23 என தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.