ADDED : ஜன 18, 2024 10:32 AM
தர்மபுரி: திருவள்ளுவர் தினத்தையொட்டி, குறள் நெறிப்பேரவை அமைப்பினர், திருவள்ளுவர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, வள்ளுவரின் பெருமைகளை முழங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தர்மபுரி, ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தையொட்டி, குறள் நெறிப்பேரவை அமைப்பினர், திருவள்ளுவர் உருவ படத்திற்கு மலர்துாவி, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், குறள் நெறிப்பேரவை அமைப்பின் தலைவர் குமரவேல், செயலாளர் வெங்கடேசன், பரமசிவம், பிறைசூடன், ஜெயவேல் உட்பட, பலர் கலந்து கொண்டனர். மேலும், 2009 ஆண்டு முதல், இந்த அமைப்பின் சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 164 கூட்டங்கள் மற்றும் திருக்குறள் குறித்த கருத்தரங்கம், விழிப்புணர்வும் நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வில், தர்மபுரி நகர பகுதியில், திருவள்ளுவருக்கு சிலை அமைக்க முடிவு செய்து அதற்காக, தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்தனர்.