ADDED : ஜூலை 25, 2026 05:37 AM

மொரப்பூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த குரும்பட்டியை சேர்ந்தவர் அருள், 17. ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., கணினி அறிவியல் முதலாமாண்டு படித்து வந்தார். அவ-ரது தாய் கல்பனா, சரியாக படிக்கவில்லை எனக்-கூறி, அருளை திட்டியுள்ளார். இதில் மனமு-டைந்த நிலையில் காணப்பட்ட அருள், கடந்த, 20ல், கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர், மாலை வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. கல்பனா நேற்று முன்-தினம் அளித்த புகார்படி மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* அரூர் அடுத்த ஊமத்தியை சேர்ந்தவர் ராதிகா, 26. இவருக்கும், மல்லுாத்து கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வேடியப்பன், 30, என்பவ-ருக்கும், 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ராதிகா மொபைலில் எப்போதும் இன்ஸ்டாகிராம் பார்த்-தவாறு இருந்துள்ளார். இதில், ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேடி-யப்பன் கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த, 21ம் தேதி மாலை கணவரிடம் சண்டையிட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப-வில்லை. இது குறித்து, நேற்று முன்தினம் ராதி-காவின் பெற்றோர் அளித்த புகார்படி அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.* அரூர் அடுத்த டி.துறிஞ்சிப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் கார்மென்ட்ஸ் கடையில் பணிபுரிந்தார். கடந்த, 21ல், வேலைக்கு செல்வ-தாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்ப-வில்லை. இது குறித்து, பெற்றோர் அளித்த புகார்-படி அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
